பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காவி நிறச் சட்டை

“நீங்கள் ஏன் எப்பொழுதும் காவிகலர் சட்டையை அணிகிறீர்கள்? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அது சம்பந்தமாக ஒரு சம்பவம் உண்டு.

நான் 1935-36ல் கோபி செட்டிபாளையத்தில் டைமன் ஜூபிலி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் கோபியில் நடைபெற்ற ஓர் அரசியல் மாநாட்டிற்காகத் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் வந்திருந்தார். அவரை நான் படித்துக் கொண்டிருந்த டைமண்ட் ஜூபிலி உயர்நிலைப் பள்ளிக்குப் பேச அழைத்தோம். நான் மாணவர் சங்கக்காரியதரிசி, எனக்கு வயது 15 இருக்கும். நல்ல சில்க் சட்டையும், ஜரிகை வேஷ்டியும் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குப் போவேன். அன்றும் அப்படித்தான் போயிருந்தேன்.

திரு. சத்யமூர்த்தி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசி எங்களை வியப்பில் ஆழ்த்தினார். நான் தமிழில் நன்றி கூறும்போது “தமிழர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. அதனால்தான் நான் தமிழில் நன்றி கூறுகிறேன்.” என்று சொன்னேன்.

உடனே சத்யமூர்த்தி என் மொழிப்பற்றைப் பாராட்டி, “அது சரி நீ தாய் மொழிப் பற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தாய்நாட்டுப் பற்று வேண்டாமா?” என்றார். “அதுவும்