பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இதய ஒலி

ஒரு சமயம் காரைக்குடி கம்பன் திருநாளுக்குப் போய் இருந்தேன். ஸ்ரீ டி. கே. சிதம்பரநாத முதலியார் என்னும் பெரியார் வெகு அருமையாக எல்லோரும் ரசிக்கும்படி கவிதைகள் சொல்லுகிறார்கள் என்று ஏற்கனவே நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் அதை நான் நம்பவில்லை.

“இது வெறும் புகழுரையாய்த்தான் இருக்க முடியும். கவிதைகளையாவது எல்லோரும் ரசிக்கும்படி சொல்லு வதாவது?” என்று எண்ணிக்கொண்டேன்.

ஸ்ரீ டி.கே.சி. அவர்கள் மேடைக்கு வந்தார்கள். எல்லோரும் அவரைக் கரகோஷம் செய்து வரவேற்றனர். சபையோர் செய்த கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் உற் சாகத்தையும் பார்த்தால் சாக்ஷாத் கம்பருக்கு நடந்த வரவேற்பாகவே காணப்பட்டது. டி.கே.சியினுடைய கம்பீரமான மீசையும் சாந்தம் தவழும் முகமும் என்னை மிகவும் வசீகரித்து விட்டன. அவர்கள் மைக்கின் முன் நின்ற நிலையும் எடுப்பான குரலும், பிரசங்க தோரணையும் என்னைப் பிரமிக்கச் செய்துவிட்டன.

அன்று கம்பராமாயணத்திலிருந்து ஒரு முக்கியமான கட்டத்தை டி.கே.சி.அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். விசுவாமித்திரர் ஜனகனிடம் ராமனுடைய வீரச்செயலைப்பற்றிக் கூறும் கட்டம்.

“வரும் வழியில் ஒரு குன்று. அந்தக் குன்றைப் பற்றியும் அதில் வாழும் அரக்கியான தாடகையைப் பற்றியும்