பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

சா.கணேசனாக வாழ்வைத் தொடங்கி, பொது வாழ்வுப் பணிகளால் காரைக்குடி சா.கணேசனாக சிறந்து, தேசபக்த பணிகளால் சட்டையில்லா சா. கணேசனாக உயர்ந்து, கம்பன் புகழ்பாடும் செயல்களால் கம்பனடிப்பொடி சா.கணேசனாக வாழ்ந்து முடித்தவர் தேசபக்தர் சா.கணேசன்.

சா.கணேசனின் உறவினர் என்ற வாய்ப்பினால், சின்னஞ்சிறு வயதிலேயே தேசத்தைப் பற்றியும், தேசப்பிதா காந்திஜி பற்றியும் அறிந்து, தேசபக்த பணிகளில் தம்மை இழந்து, சிறை வாழ்ந்து பொது வாழ்வில் சாதனை நிகழ்த்தியவர் சின்ன அண்ணாமலை.

மேடையில் பேசுபவர்களுக்கு, சுவையாக எழுதத் தெரியாது; சிறப்பாக எழுதத் தெரிந்தவர்களுக்கு மேடையில் அழகாக பேச வராது; இரண்டிலும் சிறந்தவர்கள் மற்றவர்களையும் பரிசுத்தமாக நேசித்தது கிடையாது என்பது தமிழர்களின் வரலாறு. இதை மாற்றிக் காட்டிய பெருமை சிலருக்கு மட்டும் உண்டு. அந்தச் சிலரில் சின்ன அண்ணாமலைக்கு சிறந்த தனித்த இடமுண்டு.

கல்கியின் எழுத்துக்களால் சொற்பொழிவாளனாகி, அதன்பின் கல்கியாலேயே விதந்து பாராட்டப்பெற்றவர்; அறியாப் பருவத்திலேயே காந்தியை அறிந்து, அதன்பின் காந்திஜி நடத்திய ‘அரிஜன்’ பத்திரிகையை தமிழில் நடத்த அண்ணலிடமே அனுமதி பெற்றவர்: தேவகோட்டை பள்ளியில்