பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சொன்னால் நம்பமாட்டீர்கள்


அலையுருவக் கடல் உருவத்(து)
ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை
நீ யுருவ நோக்கையா?
உலையுருவக் கனல் உமிழ்கண்
தாடகை தன் உரம் உருவி
மலையுருவி மரம் உருவி
மண் உருவிற்(று) ஒருவாளி

என்று பாட்டைப்பாடி முடித்தார்கள். ஒவ்வொரு வரியையும் நிதானமாக நிறுத்திப் பல தடவை சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்தப் பாட்டிலுள்ள அம்பானது தாடகையின் (உரத்தை) மார்பை உருவியது. மலையை உருவியது. மரத்தை உருவியது. மண்ணை உருவியது. எல்லாம் அப்படியே கண் முன்னால் காட்சியளித்தது.

ஆனால் ஸ்ரீ.டி.கே.சி. அவர்களுடைய அழகிய பிரசங்கமோ முன்னாலிருந்த மைக்கை உருவியது. பின்னர் மின்சாரக் கயிறுகளை உருவியது. அப்புறம் எங்கள் இதயத்தை உருவி மனத்திலே பாய்ந்தது:

இப்படியாக ஓர் அதிசயமான காரியத்தை அன்று டி.கே.சி. செய்து விட்டார்கள். பாட்டு அதிலும் கம்பன் பாட்டு எவ்வளவு சுலபமாகப் போய்விட்டது. அடடா என்ன எளிமை. இந்த எளிமை இத்தனை நாளாக நமக்குப் புலப்படாமல் போய் விட்டதே என்று ஒரே வருத்தமாகப் போய்விட்டது. அத்துடன் வியப்பும் ஆச்சரியமும் அதிசயமும் போட்டிபோட்டுக் கொண்டு என்னைத்-