பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

63


கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும், உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடானையை நோக்கி வந்தார்கள்.

சுமார் 20,000க்கு மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடானை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டெபிள்கள், அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.

நான் சொன்னேன் ‘20,000’ த்துக்கு மேல்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து, நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்பொழுது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப்போராட்ட வேகம், மக்களிடம் ஏற்பட்டிருக்கும்.உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள், அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள். நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம், வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது என்று கேட்டார்கள்.

அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு நான் பொறுப்பு என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த