பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

71



அதற்குள் போலீஸார் தேவகோட்டையிலும், திருவாடா னையிலும் சிறையில் இருந்த தப்பிய என்னை உயிருடனோ, அல்லது பினத்தையோ கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசளிப்பதாகப் பறை சாற்றினார்கள். இது விவரம் தெரிந்ததும் தலைவர் டி.எஸ். அருணாசலம் அவர்கள் என்னை ஒரு பாதுகாப்பான வீட்டில் தலைமறைவாக இருக்கச் செய்தார்கள்.

தலைவர் டி.எஸ் அருணாசலம் அவர்களும், நானும் பல யோசனைகள் செய்து திருச்சியில் உள்ள காவேரி பாலத்தை வெடி வைத்துத்தகர்ப்பது என்றும் அகில இந்திய ரேடியோ நிலையத்தை பாம் வைத்துத்தகர்ப்பது என்றும் திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய வெடிமருந்துகள் தயார் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.

இந்தக் காரியத்தை நாங்கள் செய்வதற்கு குறித்த நாளுக்கு முதல்நாள் போலீஸார் திடீரென்று டி.எஸ்.அருணாசலம் அவர்களைக் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நானும் தப்புவதற்காக ஏற்பாடுகள் செய்யும்போது பெரிய கம்மாள தெருவில் ஏராளமான போலீஸார் நடமாட்டம் இருப்பது தெரிந்தது. மேற்படி கம்மாள தெருவில்தான் நான் தலைமறைவாக இருந்தேன்.

அந்த வீட்டுக்கு உடையவர் ஒரு ஏணியை எடுத்து நடுவாசலில் வைத்து ஒட்டின்மீது ஏறச்செய்து வரிசையாக இருந்த வீடுகளின்வழியாக ஒட்டின்மீதே நடந்து அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு எல்லா வீடுகளையும் கடந்து குதிக்கச்சொன்னார்.

அவர் சொன்னதுபோல் செய்து நானும் குதித்தேன். அந்த வீட்டுக்காரர் தாயாராக வைத்திருந்த காரில் ஏற்றி என்னை கரூருக்கு அனுப்பி வைத்தார்.

கரூரில் டி.கே.எஸ்., பிரதர்ஸ் நாடகக் குழுவினரின்நாடகம் நடந்து கொண்டு இருந்தது. அந்த நாடகக் குழுவினர்களுடன்