பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தருமம் தலைகாக்கும்

இரவு மணி ஏழு இருக்கலாம். தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் உட்கார்ந்திருந்த எனக்குப் பலவிதமான சிந்தனைகள்.

திடீரென்று ஒரு பரபரப்பு.

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெருங்கூச்சல், போலீஸ் காவலர்கள் பலபேர் சூழ்ந்துகொண்டு ஒருவரை அடித்தும், மிதித்தும், கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.

லாக்கப்பில் இருந்த எனக்கு நன்றாகத் தெரிந்தது. பல போலீஸ் காவலர்கள் சுற்றி நின்று நடுவில் நின்ற ஒருவரைக் காலால் திருப்பிப் திருப்பி மிதித்தவாறு “கொடு இவனுக்கு சுயராச்சியம்” என்று ஒருவன் கூற, மற்றவர்கள் அவனை மிதிக்க இப்படியாகச் சிறிது நேரம் அவனை அடித்துத்துவைத்து நான் இருந்த லாக்கப்பிற்கு அருகில் கொண்டு வந்தார்கள்.

லாக்கப்பை திறந்து நான் இருந்த இடத்தில் கழுத்தைப் பிடித்து அவனை உள்ளே தள்ளினார்கள். வந்து விழுந்தவன் ஒரு தேசபக்தன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவன். உடம்பெல்லாம் இரத்தமயமாக இருந்தது.

அவனை உள்ளே தள்ளிய கான்ஸ்டெபிள்களில் ஒருவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். என்னை லாக்கப்பிற்குள் அடைக்கும்போது மேற்படி கான்ஸ்டெபிள்

சொ.ந.-6