பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

89



இந்நிலையில் என் தந்தையார் நான் எவ்விதத் தொழிலும் செய்யாமல் அரசியலில் இப்படி மாட்டிக்கொண்டது குறித்து சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள்.

‘காலணாசம்பாதிக்க யோக்யதை இல்லை, என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு?’ என்று பலவாறு பேசி விட்டார்கள். அதனால் ரோஷப்பட்டு நானும் என் தந்தையாரிடம் கோபமாக, ‘இனி தங்களிடம் காலணா கூட வாங்க மாட்டேன்; எனக்கு வேண்டியதை நானே சம்பாதித்துக்கொள்கிறேன்’ என்று கூறி வீட்டை விட்டுப் புறப்பட்டேன். கையில் காலணா காசில்லை. எங்கே போவது என்று யோசித்தேன்.

ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உள்ளத்தில் இருந்து வந்தது.

என்னைப் பெரிய வழக்கிலிருந்து விடுதலைசெய்து வைத்த ராஜாஜியைப் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்று ஏற்கனவே நினைத்து இருந்தேன்.

ஆகவே எதைப் பற்றியும் யோசிக்காமல் தேவகோட்டை ரஸ்தாவில் ரயில்வேஸ்டேஷனை அடைந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். டிக்கெட் இல்லாமல்தான்! ரயில் செட்டி நாடு ஸ்டேஷன் வந்தது. ஸ்டேஷன் ஒரு மள மளப்பாக இருந்தது. என்ன என்று பார்க்க பிளாட்பாரத்தில் இறங்கினேன். குமார ராஜா முத்தையா செட்டியார் அவர்கள் (இப்போதைய ராஜா சர்) இரயிலில் ஏறவந்தார்கள். என்னைப் பார்த்ததும் அன்போடு தன் அருகில் கூப்பிட்டார்கள்,

என் தோள்மீது கை போட்டுக் கொண்டு “எல்லாம் கேள்விப் பட்டேன். இந்த மட்டில் நீங்கள் விடுதலை அடைந்தது எனக்கு சந்தோஷம். நான் கும்பகோணத்தில் நடைபெறும்