பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置夺总

உயிர் இவர்களிடம் உத்தாரம் பெற்றுப் போவதைப் போல அதையும் கட்டுகின்ருேம் என்ருர்கள்:

நாங்கள் அத்தகையச் செயல்களை நாடவில்லை! ஏழை மக்கள் இதயம் குளிர பாராட்டுவதைக் கண்டோம்:

மாடி வீடுகளிலே நின்ற மக்கள் மாலைகளை வீசியதை :னமாரக் கண்டோம்!

குடில் மன்னர்கள் குதுரகலத்தால் பூப்பாவாடை விரித்ததைப் பூரித்துப் பார்த்தோம்!

தொண்டர்கள் தங்கள் தேரோடும் வீதிகளிலேயெல்லாம் மண்ணுகிக் கிடந்தார்கள்! ஏன்?

உயிர் எமக்கு பெரிதல்ல; அண்ணன் அன்புதான் பெரிது;

அதனைப் பெற உயிரையும் விலையாகத் தருவோம் என்ற ஆர்வமேலிட்டால் காட்சியளித்தனர்'

எமது இதயவீணையை மீட்டி ஏழிசைப் பாடிவந்தோம்: ஊர்வலத்திலே! நரம்புகள் எழுப்பிய நாதமாக நடைபாட்டு இசைத்து வந்தோம்!

இதற்கெலாம் காரணம் என்ன? எங்கள் லட்சியமே அறிஞர் அண்ணுதான்! எங்கள் வாழ்வும் வளமும் அறிஞர் அண்ணுவே என்ற எண்ணம் தான்!

இதைவிட யாம் பெறும்பேறு இப்பிறவியில் இல்லை. என்பதை உணர்ந்த காரணத்தால் தான் அண்ணு!

கடிக்க நனி சொட்டும் கரும்பு! மோப்ப மனக்கின்ற மலர்! கேட்கப் பரவி வரும் இசை

நோக்கம் எழிலீயும் காட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/104&oldid=564548" இலிருந்து மீள்விக்கப்பட்டது