பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

அந்த அருவிகள் யார் என்று உனக்கும் தெரியும்!

துடிப்பான உள்ளம் படைத்த தமிழகத்து வாவிபர்கள் தான் என்பதை நானும் அறிவேன்.

வாலிபப் பருவத்தின் வனப்பையும்-வலிமையும் நீ நன்ருக உணர்ந்திருக்கிருய்.

இமைப் பொழுதில் எதையும் சாதிக்கும் திறன் பெற்றவர்கள் வாலிபர்கள்.

அதைப் போலவே எதையும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள்.

நீ வரும்போது வாலிபர்கட்கு காதல் உணர்வை ஊட்டி ஒன்றுபடுத்துவாய்:

இப்போது அவர்களே காதல் களியாட்டத்திலிருந்தாலும் பிரித்து, கடமை வீரர்களாக மாற்றும் சக்தியை ஊட்டி விட்டாய்! வாழ்க நின் செயல்! வளர்க இமயம்போல் இவை

அவர்கள் பருவயிரத் தோள்கள்மீதும், பொங்கு மணி மார்பகத்தின் மீதும் நீ தவழ்ந்து உலுக்கிப் புறநானூற்று வீரர்களாக்கி விட்டாய்.

வாலிபர்கட்கும் உன்மீது வரையிலா பற்றை உண்டு பண்ணிவிட்டாய்.

மலரை நாடிவரும் வண்டினத்தைப்போல அவர்கள் உன்னை நாடுகிரு.ர்கள்!

பல அருவிகள் எவ்வாறு ஒன்று திரண்டு நதியில் கூடு கிறதோ, அதைபோல:

வாலிபர்கள் என்ற அருவிகள் காலமெனும் நதியோடு கலக்க ஓடிவருகின்றபோது, தென்றலே, அந்தக் கால நதி யினையே நான் ஆட்கொண்டு விட்டேன்; நீங்கள் ஏன் அங்கு போய் கூடுகிறீர்கள் என்று கூறி, அந்த அருவிகள் தோள் மீதே உந்தி உந்தி ஆனந்தத் தாண்டவம் புரிகிருய்ப்போலும்!