பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈盈蔷

அருவிகளின் தோள்களையே ஆட்கொண்டு வீரத்தை ஊட்டிவிட்ட தென்றலே நீ வாழ்க! உன்னை எப்படித்தான் புகழ்வேன்! வார்த்தையிலேயே வேறு கூற.

சிறுகாலே இத்தகையப் பண்புபெற்ற நீ சும்மா இருக்கிருயா என்ருல் அதுவுமில்லை.

முத்து முத்தான கருத்துக்களை உடைய கடலிலே போய் தவழ்கிருயே ஏன்?

கடலலையின் உச்சி தோறும் சதிராடுகிருய். அந்தக் கடல் தென்றலே!

இலக்கியக்கடவில் அங்கும் ஆமையாகவா அடங்கிக் கிடக்கிருய்?

இலக்கியக் கடலலையிலே தெப்பம்போல மிதந்து மிதந்து மூழ்கி மூழ்கி பல முத்துக்களையும், பவளங்களையும் சேகரித்து இலக்கிய அறிவு பெறுகிருய்.

இலக்கியம் என்ருல் விளையாட்டா என்ன? இதை அறிவாய் நீ அறிவாய்!

இலக்கிய கடலுக்குள் புகுந்த ஒரு புலவன் சாகும் காலம் வரை மீண்டும் திருப்தியோடு திரும்ப முடியாது.

திருக்குறள் ஆராய்ச்சியிலே சென்றவன் இன்றுவரை திரும்பியதில்லை!

சிலப்பதிகாரத்துள் புகுந்தவன் காலம் போதவில்லையே என்று தடுக்கி வீழ்ந்து விட்டான்!

கவிங்கத்துப் பரணிக்குள் கரை காணச் சென்றவன் போர்க்கள ஒசையிலேயே மூச்சு திணறிவிட்டான்!

அகம், புறங்களை அலசுகிறேன் என்று சென்றவர்கள் அந்த எல்லையை விட்டு இதுவரை திரும்பியதில்லை.

தமிழ் இலக்கியத்தின் பொருள் ஆழ்கடலையும் மிஞ்சியது: