பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அத்தகைய கடலிலே புகுந்து அழகழகான முத்துக்களே பும்-பவளங்களையும் தேடிப்பெற்றுவிட்ட தென்றலே, உன்னை எவ்வாறு உலகிற்கு புகழ்ந்து காட்டுவேன்!

இலக்கியக் கடலினுள் மட்டுமா புகுந்தாய் அதன் உச்சியிலேயே சதிராடி புதியதொரு இலக்கியப் பரம்பரை பினேயே உருவாக்கிவிட்ட உன் பெருமை வாழ்க!

கடல்மேல் சதிராடி தென்றலே கடலோடு மட்டுமா நின்ருய்?

விரிந்து பரந்து கிடக்கும் இலக்கியச் சோலைகளுள்ளும் புகுந்து விட்டாய் நீ போக முடியாத இடம் ஏது:

அந்தச் சோலையினுள்ளிருக்கும் பற்பல இலக்கிய உள்ளங்கள் என்ற மலர்களின் நறுமணத்தை உன்ைேடு சேர்த்துக் கொண்டாய்!

மதுரைத் தமிழ்ச் சங்கங்களில் முன்பு எப்படி தமிழ் இலக்கியங்கள் வளர்ந்ததோ அதைப்போன்ற நிலையை நாட்டிலே உண்டு பண்ணி விட்டாயே!

உன் செயற்கரிய செயலால் நாவலர்களும், கலைஞர் களும், கவிஞர்களும் இலக்கிய உணர்வு பெற்று நாட்-ை இலக்கியப் பூக்காடாக்கி விட்டார்கள்.

அந்த அகமகிழ்வோடு சோலையிலே புகுந்த தென்றலே நீ கத்தி போன்ற தாழை மடல்களையெல்லாம் சுற்றி சுழற்றச் செய்து அறப்போர் வீரர்களாக ஆக்கிவிட்டாய்

சாதாரண தாழைமடல்கள்-கத்திபோல் கூர்மையான தாக இருப்பினும் அவற்றை வீரர்களாக நடமாடச் செய்து விட்ட பெருமை உன்னையல்லாமல் வேறு எவருக்குண்டு?

அத்தகைய வீரர்களைப் போல நடித்த நாணற் பூக்களை யூ உருவிலே புகுந்துவிட்ட பயனற்றவைகள் என்று அவற்றை காட்சிப் பொருளாக்கி விட்டாய்!