பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星直态

உணர்வும் இல்லையே என்பதை அவர்கட்கு அறிவுறுத்தத் தான் என்பது. நான் உன்னிடம் கற்ற அரசியல் பாடமாகும்:

யானை தன் கனவில் சிங்கத்தைக் கண்டால் அலறும்!

அறப்போர் வீரர்கள் அரிமா போன்றவர்கள். ஆட்சி யாளர் யானையை நிகர்த்தவர்கள்:

அந்த யானை மொழிப் போர் என்ற வெம்மைக்குட்பட் டிருந்தாலும், தன் அடித் தொண்டையிலிருந்து உமிழ்நீரை வெளியேறச் செய்து, தனது உலர்ந்த நாவை நனைக்க முயற்சிக்கிறது. ஏன்?

ஒதிய மரம் போன்ற மனிதர்களின் மொழி உணர்வற்ற பண்பால்தான்; காட்டிக் கொடுக்கும் கயமைத் தனத் துரோகத்தால்தான்.

இந்த மொழித் துரோகிகட்கு தாய் மொழியுணர்ச்சி இல்லை என்பதை நீ அறிந்தாயே!

அதனுல்தான் தாய்மைப் பண்பு பெற்ற முதிர்ந்த தென்னை மரத்தின் மீது நீ தழுவி ஒயா?

தாய்மைப் பண்பு தலைசிறந்த பண்பு. எல்லாரையும் பேதமற்ற திலேயில் காத்துப் பேணும் பண்பு.

அந்தப் பண்புக்குரிய தெங்கை நீ தழுவியது ஏன்? அறிவேன் தான்!

தெங்கு, சிறு கன்முக இருக்கும் போதுண்ட வானமுதை என்றைக்குமே தேக்கி வைத்து, பசியெடுக்கும்போது தனது உரிமையாளனுக்கும், மற்றவர்கட்கும் பேதமின்றி இளநீரை யும் தேங்காயையும் தந்து உதவுகிறது. இது தாய்மைப் பண்பு களுள் ஒன்று என்பதனை நீ உணர்ந்தாய் போலும்:

அதனுல்தான் அத்தகைய முதிர்தெங்கின்மீது தவழ்ந்து அந்தத் தாய்மை உணர்ச்சியை-பண்பைத் இந்த துரோக உள்ளங்கட்கும் ஊட்டினுயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/119&oldid=564563" இலிருந்து மீள்விக்கப்பட்டது