3. i
அப்படிப்பட்ட ஊழிப் பெருமக்களை விழுங்கிய அதே காலம்-அவர்களை எருவாக வைத்தே-எப்படி இன்றைய தினம்வரை வளர்ந்து கொண்டே வருகிறது?
தர்க்கரீதியான வின இதுவென்ருல், இதே கேள்வி ண்ணு விஷயத்தில் எட்டிப் போய்விடவில்லை.
எழுதி முடித்த ஒரு கட்டுரையை இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் படித்தால், அது பழையதாகத் தோன்றும் :
உண்மையில் அது பழையதல்ல-புதிய அறிவு வளர்ந் திருக்கிறது என்றே பொருள்.
ஆல்ை ஏசு-புத்தர்-நபி-வள்ளுவர் இவர்களுடைய கருத்து நாள்தோறும் புதிது புதிதாகத் தெரிவானேன்?
இந்த இடத்தில்தான், காலம் இவ்வளவு நோஞ்சாகை இருக்கிறதே என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் காலத்திற்குத் தீனியிட்டு வளர்க்க வேண்டிய பொறுப்பு அறிஞர்பெருமக்களிடம் இருப்பதாகத்தெரிகிறது. காலத்திற்குத் தேவையான உணவை அண்ணுவைப் போல் அளிப்பவர்கள் இனி இல்லை.
கட்சிக்காதல் அல்ல இது அறிவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகின்றவன் செய்கின்ற சரியான விமர்சனம்.
அண்ணு பிறந்தது 1907-ல் அவர் அறிவு தோன்றியது எப்போது?
அண்ணு இறந்தது 1969-ல் அவர் நினைவு முடிவது எப்போது?
இந்த இரு விளுக்களுக்கும் இன்றைய தினமிருக்கும் வேதாந்திகளாலேயே பதில்கூற முடியவில்லை.
எனவே, அண்ணுவைத் தாக்கி எழுதுகின்ற சித்தாந்தி களைப்பற்றி நான் கவலைப்படவில்லை.