இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
# 21
மக்கள் சிந்தையணு ஒவ்வொன்றும் மொழி உணர்வு கொண்டு, பொதிகையிலே உன்னுடன் பிறந்த தமிழனங் கைப் போற்றிப் பாதுகாக்க வந்த செல்வமே தென்றலே! வாழ்க நீ பல்லாண்டு!
தமிழகத்தின் பேரறிவுப் பெட்டகமே! பெரும் நிதியே! உன் புகழ் தமிழ் உணர்வு பெற்றவர்களின் வீடுதோறும் திருவிள்க்காய் திகழ்கிறது.
எந்நாட்டிலும் தோன்ற முடியாத தென்னுட்டுத் தென்றலே! அறிவுலகசோதியே காஞ்சி நகர் வாழ் தென்னலே! தென்றலையொத்த உமது அரிய சேவையை நாங்கள் உணர்ந்தோம்! நாடும் கண்டு களி பேருவகை பூக்கிறது:
இயற்கையின் செல்வமே தென்றலே! உன்னைப்
பாராட்டுகிருேம்! வாழ்த்துகிருேம்! நீ பிறந்த நாட்டிலே உனக்காக நாங்கள் விழாவெடுக்கிருேம்!