பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனணு ஒரு

கதிரவன்!

கதிரவனே, நீ வந்தாய்! நான் முளைக்க ஆரம்பித்தேன்: நான் காலையா? மணத்தின் மலரா? இனம் புரியாத காலமா? உனது கிரணங்களால் எனதுயாழ் சோலைக்கு நடுவில் மின்னுகிறது: உனது வரவால், என்னில் பூட்டி யிருக்கின்ற தந்திகள் மீட்டாமலே பாடுகின்றன !

எனது ஜீவன், உனக்கு முன் பேயே கடன்பட்டிருக்கின்றது: கடன் வாங்கியவன் அதைத் திருப் பித்த ரவேண்டும்.

ஏ, இளம் கதிரே, திக்கெட்டும் ஒளிப் பிழம்பை விரவிவரும் உனது திருமுகத்திற்குமுன், என்னுடைய அடிமைத்தனம் மறைந்தொழி கின்றது !

உனக்கு இருக்கும் நூறு கோடி கதிர்க் குதிரைகளைக்கருணையோடு என் சாம்ராஜ்யத்தில் புகுத்து, தாழ்ந்து போயிருக்கும் என் மானம், முளை விட்டுக் கிளம்பும் விதைக் - குருத்தைப் போல கொஞ்சம் நிமிரட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/124&oldid=564568" இலிருந்து மீள்விக்கப்பட்டது