பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 5

உனது ஆதிக்கத்தால் கேட்பாரற்றுக் கிடக்கின்ற விதைகள் முளைக்கின்றன. வெளுத்துப்போன இலைகள் பச்சையாகின்றன:

நெளியும் புழுக்கள் கூட்டுப் புழுக்கள் ஆகின்றன!

பறவைக் குஞ்சுகளின் இறக்கைகள் முதிர ஆரம்பிக் கின்றன.

அருவியின அலையோசை அருகில் இருக்கும் வெட்டுக் கிளியின் காதிலே பாய்கின்றது.

பச்சைப்புல் மீதிருக்கும் ஒவ்வொரு பனித்துளியும், உன் எழிலே எழுதி எழுதிப் பழகுகின்றன.

அடிவானத்தில் நீ தொட்டில் இட்டுக் கொண் டிருக்கின்ருய்!

வானத்தின் சிம்மாசனத்தில் நீ மதியத்தில் அமருகின்ருய்!

அந்தி நேரத்தில் கண் சிவந்த வீரனைப்போல் காட்சி தருகிருய்!

உனக்கிருக்கும் பெருந்தன்மையான பண்டால், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகின்ருய்!

உன்னுடைய தயாள குனத்தை விவரிக்க, பைபிளின் கர்த்தா ஏசு பெருமான் வரவேண்டும்!

குரானின் மூலவர் நபிகள் நாயகம் வரவேண்டும்.

தம்மபதத்தின் தலைவன் புத்தர் பெருமான் வருகை தரவேண்டும்.

இருண்ட காட்டிலே நீ எட்டிப்பார்க்கும்போது தாயைக் கண்ட சேயைப் போல அரும்புகள் கூச்சமற்றுச் சிரிக்கின்றன

அறிவுக் காட்டில் நீ நுழையும்போது, உனக்கு வழிவிட சந்தன மரங்கள் தயாராக இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/126&oldid=564570" இலிருந்து மீள்விக்கப்பட்டது