பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 27

f

நீ ஆயிரம் சோதி; எனவே உனக்கு ஆயிரம்பகை உண்டு

நீ தரணி, இயல்பாகவே பரணி உன்னிடத்திலே உண்டு:

நீ செங்கதிர்; ஆகவேதான் நீ காலேயிலே மென்மையாக இருக்கின்ருஜய்!

கண்டன் நீ; என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை!

தயணன் நீ உன்னிடத்திலே வைராக்கிபம் உண்டு!

ஒளி நீ; உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு

பிடித்ததில்லை-ஒளிந்துகொண்டே இருப்பவன்!

சான்ருேன் நீ; உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்!

நீ எல்; எல்லாம் நீ! நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்! நீ அனலி, கொடுமைகளைத் தீய்ப்பவன்! தீ அரி, எல்லாம் அறிந்தவன்! பானு நீ, அதனல் தாமரையைக்கூட மலரவைக்கின்ருப்: அலரி நீ யாரையும் விழிக்கச்செய்கிருய்! நீஅண்டயோனி உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனுல்! நீ கனவி; உன்னுடைய நிறம் கன கம்!

நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு; தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்: கதிரவன் நீ; வானமே உனக்குக் கழனியாவதால்: பகலோன் நீ; நாட்களைப் பகர்வதால்! வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால் தினகரன் நீ; புது நாட்களைப் புதுக்குவதால்: பகல் நீ; சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்!

சோதி நீ; சோதனை உன்னிடத்திலே இருந்து எழுவதால் திவாகரன் நீ; அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே