பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

அப்போதெல்லாம் நான் உனது கிரணங்களால் ஒளி கண்டு நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன். எனது ஆசையும்.காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கிய தாகும் என் குழந்தைகளின் எதிர்காலத்தையும்-எனது இறுதி காலத்தையும்-நான் அந்த பலி பீடத்தின் மீதே, வைத்துத் துவக்கின்றேன். உனது கதிர் வட்டத்தால் என்னே எந்த உருவமாக்கினலும்-அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்!

எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும் ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாரு திருக்கும் உனது பாதத்திலே வைக்கிறேன். எனது எண்ணங்கள் அத்தனையும் உன்னிடத் திலேதான் துவங்குகின்றன. கொஞ்சமும் தாமதமின்றி: அவை உன்னைப் பின் தொடர்கின்றன! எனது பகற்கனவு களும் இராக் கனவுகளும்.நீ கொளுக்திய ஆயிரம் விளக்கு களால் ஆனவை. மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது: என்னுடைய கரம் உன்னே நோக்கி வளர்கின்றது! அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடி யிலே வீழ்கிறது: மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்கு கின்ற தன்மையைப் பார்த்தால் உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது. என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானல்...

அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள்-புயற். காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது-வீரம் விளங்குகின்ற உனது வியன் மிகு அரசியலே நான் பரிந்து கொள்ள முடிகின்றது. பருவ காலங்களில் நீ மலையின் கம் அருவியின் தோள்மீதும்-மலரின் உதட்டின் மீதும்தும்பியின் இறக்கைகள்மீதும்-கேட்பாரற்றுத் கிடக்கும் காளான்கள்மீதும்-செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போது-எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப்போல உணருகிறேன். பாலைவனத்திலே காய்கின்ற உனக்குப் பொழிலுக்கு இடையில் வேலை என்ன?