133
யிடும் வாயாகும். அவர்களுடைய கண்கள் இறந்தவனுடைய கண்களாகும். அவர்களது ஆதிக்கம் சவப் பெட்டியின் மேல் துரவப்பட்ட பூக்களின் ஆதிச் கமாகும். அவர்களது நடை தொழு நோய் பிடித்தவனுடைய நடையாகும். அவர்கள் தலையிலே சூடிக் கொள்கின்ற கீரீடம் நாடே இல்லாத ஒரு ராசாவின் கிரீடமாகும்.
இக் குறைபாடுகளின் தொகுப்பாக இருக்கின்ற எதிரிகள் கண்டத்தின் உச்சியிலே இருக்கின்ற உன்னைச் சாடும்போது நீ வசந்த காலத்தின் மாலை நேரத்திலே இருக்கின்ற மரத்தைப் போல குளுமையாக நின்று தலையை ஆட்டுகிருய்.
இயல்பாக அடிக்கின்ற காற்றில்ை வெவ்வேறு உருவங் களைப் பெறுகின்ற மேகத்தைப் போல, அவர்களுக்குப் பல உருவங்களை நீ காட்டுகிருய். உனது முகத்திற்கு முன்னல் திரையில்லை-சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை-எழுத்துக்கு முன்னுல் வேறெழுத்து இல்லை-உனது ஆட்சிக்கு முன்னல் வேருெரு ஆட்சி இல்லை. பகலவனே! உன்னை நான் இதுவரை யில் இவ்வுருவத்தால் கண்டேன் என் உருவத்தை நான் உனக்கு சொல்வி விடவேண்டும் அல்லவா? நான் நடு வானத் திலே இருந்து நழுவி விழும் எரிநட்சத்திரமல்ல. நெற்கதிர் களுக்கு நடுவில் மினுக்கி விழும் மின்மினி அல்ல.
உரிமைக்குக் கையேந்தி-உணர்வுக்கு அலேந்து கொண் டிருக்கும் ஒரு உயரிய உருவம். இயற்கையின் ஒழுங்கான படைப்பு-தமிழால் எழுதப்பட்ட ஒவியம்-நான் தமிழன்.