பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

அதன் பெயர் நிலவு.

அந்த நிலா, ஒப்பற்ற ஒளிப் பிழம்பு. தெளிவுக்கு இலக்கணம் அது.

இந்த ஒளியால் அதனைத் தீண்டியவர்கள் ஒரு போதும் இருளில் இருந்ததில்லை.

காணுமல் போன தனது சீவனைத் தேடிக் கொண்டு அலைபவன்கூட, அந்த நிலவொளியில், காட்டோரத்தில் கண் கலங்கிக் கொண்டிருக்கும் சீவனைக் கண்டு பிடிக்கிருன்.

உறவு முறைகள் பழுதுபட்டு அங்கங்கே உதிர்ந்து போகிற நேரத்தில் அந்த ஒளியால் சிதறியதை மனிதன் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியும்.

நெடுந்துரத்திலிருந்து ஒளி கொடுக்கின்ற சூரியனிட மிருந்து சூடு வருகிறது.

ஆனல் நெடுந்துாரத்திலிருக்கின்ற நிலாவிடம் இருந்து சூடு வருவதில்லை.

இந்த வித்தியாசம் ஏனென்று புரிகிறதா? உலகத்தில் சிலர் அணுகிற நேரத்தில் கொதித்துக் கொண்டுமிருப்பார்கள்-குளிர்ந்து கொண்டும் இருப்பார்கள் மனிதன் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவனுக்குச் சூரியனையும்-உழைத்து அலுத்த நேரத்தில் அலுப்புக்கேற்றபடி நிலாவையும் நான் படைத்தேன்.

நிலா, கடலைக் கூத்தாடச் செய்கிறது. நிலவுக்கு இந்த உலகத்தைத் துரங்க வைக்க முடியும். நிம்மதியில் தனது வாழ்நாளை இந்த உலகம் கழிக்க வேண்டுமென்பதற்காக, கோடிக் கணக்கான தாரகை களோடு, வருகின்ற பெரிய உள்ளம் படைத்தது நிலா.

அ-9