盈器怒
சூரியனுக்கு கை எடுப்பதுபோல் நிலவுக்குக் கையெடுக்க இந்த சமுதாயம் ஏன் மறுக்கிறது.
அதிலே ஒரு இரகசியம் இருக்கிறது!
பகலவன வணங்குகின்ற நேரத்தில் மனிதன் விழித்துக் கொண்டிருக்கிருன்.
நிலவைப் பற்றி நினைக்கின்ற நேரத்தில் மனிதன் பாதித் துரக்கத்திலே இருக்கிருன்.
மென்மையான தென்றலின் தேர் மேலேறி பயணம் வருகின்ற இராக்கால மவுனம்-நிலவைத் தன்மீது குடையாகப் பிடித்துக் கொண்டு வருகிறது.
உலகத்தின் நடவடிக்கைகளை முழுமையாகக் கான வேண்டுமென் ருல் இரவு நேரம் சரியான நேரமாகும்.
பெரிய மனிதர்களின் போவி வேஷமும்-சந்தர்ப்பவாதி களின் கொட்டமும்-சாகசத்தின் முழு உருவமும் கட்டவிழ்ந்த குதிரையாக ஒடுகின்ற நேரம் இராக்காலம்ாகும் அந்த நேரத்தில் பொதுவாக மனிதப் பண்பு பலகீன மடைகிறது.
மனிதனுடைய சுய உருவம் தெரிய ஆரம்பிக்கின்ற நேரத்தில் சிரித்த முகத்தோடு பார்ப்பது நிலாவாகும்.
அந்த நிலவை நாம் போற்ற வேண்டும். அது தத்துவத்தில் இருந்தால் அதனைப் புத்தம் என்று அழைப்போம்.
<罗盘 கவிதையிலிருந்தால்-அதனைக் கவித்துவம் என்றழைப்போம்.
அது சித்தாந்தத்தில் இருந்தால் அதைச் சித்தர் பட்டியலில் சேர்ப்போம்.
அது கணிதத்தில் இருந்தால் எண்களின் மாயத்தில் சேர்ப்போம்,