பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星晏江

அதோ மின்னல்1 அதன் தோற்றம், முதல் காதல் பார்வை யிலே வெளி வந்த ஒளி போல இல்லையா?

உடனே இருள் அது கூம்பிய காதலின் வடிவமல்லவா? பிறகு மழை, உடைந்த காதலின் உப்பு நீர் தானே. அது? இப்போது ஊரே பெருக்கெடுத்தோடுகிறது! எங்கும் வெள்ளக்காடு அலை பரப்பி ஓடை வடி வெடித்து. கால்வாய் வழியாக ஒடுகிறது வெள்ளம்.!

அந்த வெள்ளப் பெருக்கின் மீது மேலும் மழைத்துளிகள் விழுந்துகொண்டே இருக்கின்றன!

ஜலதரங்க ஒசை: தண்ணிர்க்கொப்பளங்கள் தோன்றிச் கிரிக்கின்றன!

அக்கொப்பளங்கள் மீது வான் துளிகள் வீழ்ந்து உடைத்து, நீரோடு நீராகக் கலக்கின்றன:

தப்பித்தது ஒரு குமிழி! சுழற் பெருக்கோடு ஒடையிலே குமிழி மிதந்து செல்கிறது!

தமிழன்னையே! தாயே! மலர்த்தேன் குட்டையிலே குளித் தெழுந்து வந்தவளே நீ வாழ்க!

எத்தனையோ படைப்புக்களைப் படைத்த நீ, உனது கைக்குக் கிடைத்தவன் நாளு?

என்னைக் குமிழியாகப் படைத்தவளே! நீரின்மீது ஒடமாக ஒட்டி விட்டவளே!

தாய்ப்பாசம் என்னைத்தள்ள, உன் மடியை நோக்கி வர வேண்டிய என்னைக் கற்களிலே மோதி உடையவா படைத் தாய்?

எனது தோற்றத்தால், நீ பெறுகின்ற மகிழ்ச்சிதான் என்னம்மா!