143
அலையின் அழகில் ஆனந்தக் கூத்தாடும் தென்றல் தேரை நீ ஒட்டிவந்த நாளில்-உனது தேரூறும் பாதையெலாம் மணலாக இருந்தேன்!
அருள் பெற்ற காரணத்தால் எனக்கு நீ அருளிய உருவம் குமிழியா அம்மா!
நிதானத்தைத் தவிருத மனிதன் நித்திரையில் நல்ல கனவைக் காண்கிருன்:
அவனின் ஆசைகள் பகலிலே பூத்துக் குலுங்குகின்றன:
தாயே! என்ன கனவு நான் காண்பேன்!
பயங்கரத்தின் தலைவாயிலிலே நான் பொடிப் பொடியா வதைப் போல தினம் தினம் காண்கின்றேன்.
என் வாழ்நாள், மக்கிப்போன கயிற்றைப் போல இழை உறிந்து கிடக்கின்றது!
இது, ஒரு காலத்தில் ஆனயைக் கட்டி இழுத்தது! இப் போது, ஒரு ஆட்டைக்கூட கட்ட முடியாமல் கூடியரோக நோயாளியின் உடலைப் போல, எலும்புருகி, சதை தளர்ந்து அவிழ்ந்து கிடக்கிறது:
தாயே! இந்த நீர்க்குமிழித் தேகம் எனக்கு வேண்டா மம்மா!
வானிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் என்னைக் காயப் படுத்துகின்றன:
அந்தத் துளிகள் தன் காலால் என் தலையை உதைத்து உதைத்து மிதிப்பதைக் கண்டு, விளையாட்டுப்பிள்ளைகள் சிரிக் கிரு.ர்கள் தாயே!
பயங்கரவாதி சிரிப்பது போல், கீற்றுவிடும் மின்னல் திக் கோடு, என்னைச் சுண்ட வைத்து விடாதா?