盈4$
தொட்டிலில் நீ பாடிய பாட்டை, நான் திரும்பத். திரும்ப எண்ணிப் பார்க்கின்றேன்:
அவை, கவனத்தின் கூடாரத்திற்கு வரவே ஆண்டுகள் பல பிடிக்கும் போல் இருக்கிறதே!
உனது இனிமையான அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள என் செவிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
அவற்றில், அவலத்தின் ஆரவாரத்தைத் தவிர வேறெது. வும் கேட்கவில்.ை
அம்மா! இதோ நான் உடற்குன்றி, இப்போது இரண்டு கற்களுக்கிடையே நுழைகின்றேன்.
அக்கற்கள், எதேச் சாதிகாரத்தின் பிடியைப் போல், இறுக்கமாக என்ன பிடிக்கின்றன.
எனது சுதந்திர உணர்ச்சிக்கு அவை விலங்குகளைப் பூட்டின போல் தோன்றுகிறது.
உண்மையிலேயே நீ என்னைச் சுதந்திரமாகப் படைத் திருந்தால், பலி பீடத்தின் முன்னலே நிற்க வைத்திருக்கும் ஆட்டைப் போல ஏன் என் உரிமை பெருமூச்சு விட வேண்டும்!
பலாப் பழத்தின் முட்களைப் போல் சொறி பிடித்தகம் களுக்கு இடையே, இப்போது எனது உடல் தேய்ந்து தேய்ந்து, நழுவி நழுவிச் செல்கிறது:
இருபதாண்டு கால பேயாட்சி ஒன்றிடமிருந்து தப்பித்த மக்களைப் போல, அக்கற்களே விட்டு ஒருவாறு பிழைத்து நகர்ந்து வந்து விட்டேன்.
திடீரென்று உயரமானதோர் இடத்திலே இருந்து தட தட வென்று சரிந்து கீழே விழுந்தேன்.
ஒட்டகத்தின் மீதிருந்து அரசைெருவன் ஒட்டாண்டி யான போது எப்படித் தள்ளாடித் தள்ளாடி தடப்பாளுேக அப்படி நடுங்கிக் கொண்டே இப்போது செல்கிறேன்.