பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖伞&

தமிழர் மானத்தைக் கரைக்க ஒரு ஊழிப் பெரு வெள்ளம் எப்போதும் படையெடுத்ததில்லை எடுத்தால் அது வென்றதுமில்லை என்பதை நீ அறியாயா அம்மா!

தாயே! இப்போது ஒரு காய்ந்த இலையின் மீது எறும்பு ஒன்று மிதந்து செல்கிறது.

அதனுடைய முகத்தோற்றத்தைப் பார்க்கும்போது உரிமை இழந்த கடல் கடந்த தமிழர்களைப் போல எனக்கும் புலனுகிறது.

அந்த இலை இப்போது என்னருகே வருகிறது: பளபளக்கும் என்னுடைய உடலை பவளமலை என்று: நினைத்து, எறும்பு என்மீது ஏற ஆரம்பித்து விட்டது.

அதோ பாரம்மா, அந்த எறும்பு தனது தகுதி திறனை அறியாமல் சரிந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி எழுவதை: இஃது சில பேதை மனிதர்களின் மன நிலையைப் போல இல்லையா அம்மா?

தாயே! இந்த பொய்யானத் தோற்றத்தை ஏன் அளித்தாய்?

வாழவேண்டிய ஒரு உயிர் நீரில் மூழ்கிப் போய் விட்டதே! அழுக்காறு கொண்டார்க்கு அதுவே சாலும் என்று உலக ஆசான் வள்ளுவன் கூறினனே, அஃது இந்த எறும்பைப்போன்ற மனிதர்களுக்குத்தாளு?

மனித சகாப்தம் என்பதைக் காலம் ஒன்றுதான் விளக்க முடியும்.

அந்த விளக்கத்தில் இருக்கின்ற ரகசியங்களை காலம் ஒன்ருல்தான் பிறகு பிறப்பவர்களுக்கு அறிவிக்க முடியும்.

அம்மா! உனது ரகசியத்தை அறிவதற்கு நான் நெடுந் துரம் வந்திருக்கிறேன்.