பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

நான் செல்லுகின்ற நீரோடையின் இரு மருங்கிலும் வாளெடுத்த போர் வீரர்களைப்போல நாணற்புற்கள் கரையில் முளைத்திருக்கின்றன.

இப்போது நான் மிகவும் களைத்து விட்டேன். ஒரு நாணற் புல்லின் அடியிலே நான் இளைப்பாறுகிறேன்.

அந்தப் புல்லின் தண்டின்மேல் ஒரு வானம்பாடி பாட ஆரம்பித்தது:

அதன் கண்டத்தில் ராஜசபையில் பாடுகின்ற வித்துவானின் குரல் இருந்தது!

அதன் கவிதையில் பாரதிதாசனின் புரட்சி யாப்பு இருந்தது.

அதன் தாளத்தில் பாரதியாரின் கும்மி இருந்தது. அதன் இசையலையில் தாயே உன்னுடைய தேனமுதத் தாலாட்டும் இருந்தது;

அந்த வானம்பாடி பாடிய பாட்டுதான் என்ன? *வீணையோடும் சுரமண்டலத்தோடும் மத்தளத்தோடும் நடனத்தோடும்-யாழோடும் தீங்குழலோடும்-ஒசையுள்ள இசைத் தாளங்களோடும் உரிமையைப் பாடிக்கொண்டு வாருங்கள்” என்ற பொருள்தான் அதன் பாட்டிலே ரீங்காரமிட்டது.

இந்த இசையின் கூர்மையால் எனதுள்ளம் பொத் தலானது. அதிலே அந்தக் கருத்துக்கள் குடித்தனம் செய்தன. மலைகளில் சந்தனத்தை-மேகத்தில் நீரைக்-கடலில் முத்தை-வானில் நிலவை-தேனில் சுவையை-வயலில் ஆட்டத்தை-புயலில் பேயாட்டத்தை-நெருப்பில் சூட்டை நிலவில் குளிர்ச்சியை உண்டாக்கி மகிழ்ந்து ஒய்வெடுக்கும் தாயே, உனது பேரில் எனது ஜீவன் தாலாட்டுப்பாடுகிறது. நீதி மன்றத்தில் நின்று அநீதியைக் கண்டிக்கிறவளே. பள்ளியிலே இருந்து புதுப்பாடத்தைச் சொல்லிக் கொடுப்