பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運が登

பவளே, விருந்திலே அறுசுவை படைப்பவளே! உன்ன்ை நான் ஒன்று கேட்பேன்!

எனது உதடுகளில் உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் நீ தந்த நம்பிக்கையாகும்!

எனது பூர்வகாலத்துச் சொத்து எல்லாம் நீ எழுதி வைத்தவைதான். அதையே, கேள்வி ரூபத்தில் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது உடலைப் பார்த்தாயா? வாழ்க்கையின் வெடிப்பும் வறுமையின் கீறலும்-துன்ப வடுவும் அதிலே சோக ரேகை களோடு பின்னிக் கிடக்கின்றன:

அக்கினித்தழலால் வெந்து போன என் மனம், உனது அருள்மருந்துக்காகக் காத்துக் கிடக்கின்றது.

இந்த நாட்டின் ஜீவநாடி என்று உன்னைக் கூறுகிருர்கள்,

எந்தக் காலத்திலும் நீ தூங்கி அறியாதக் கண்களை வைத்துக் கொண்டிருப்பவள்.

நோஞ்சானுக்கு நேசக்கரமும்-எதிரிக்கு வீரக்கரமும் நீட்டுபவள்.

இப்போது என் நிலை, பயங்கரமான அரசியல் முற்காட்டில் செல்லுபவனைப்போல் இருக்கிறது.

நான் மேற்கொண்டு எனது பயணத்தை தொடர் வதற்கு முன்னல் நீ வந்து என்னை அள்ளி எடுத்து உன் இதயக் கடலிலே மிதக்கவிடு.

சிறுவர்களின் கோரிக்கைக்கும்-சூழ்நிலை என்ற சுழலுக்கும் நான் பலியாகாமுன் உன் உள்ளக் கடலில் என்னை உலாவவிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/151&oldid=564595" இலிருந்து மீள்விக்கப்பட்டது