பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置54

குஞ்சுகள் கூட்டிலே இருந்து தாய்க்காகக் காத்துக் கிடக்கின்ற்ன!

தொடுவான் வீடு திரும்பும் பறவைகளைத் தினந்தோறும் பார்க்கிறது.

அந்த பறவைகளின் இலட்சியத்தைப் பற்றி அது தினந் தோறும் திணைக்கிறது.

வீடு திரும்பிய தாய்ப் பறவைகளைக் கண்டு களிக்கும் குஞ்சுகளைத் தோடுவான் பார்க்கிறது.

இவைகளின் வாழ்க்கைக்கு இரையெங்கே கிடைக்கிறது. அற்பமான இறையைத் தின்றுவிட்டு எவ்வளவு அழகாகப் பாடுகின்றன-தொடுவான் சிந்திக்கிறது.

முழுமையான வாழ்க்கை இந்தப் பறவைகளுக்கு யார் வரையறுக்கப் போகிருச்கள்.

இவ்வாறு தொடுவான் சிந்திக்கும் போது அதன் முகம் சிவந்து விடுகிறது.

ஏழைகள் பால் அண்ணுவுக்கு தொடுவானின் இரக்க குணம் எப்போதும் இருக்கிறதை நான் உணர்கிறேன்.

ஒரு கவிஞன் எண்ண வெளிச்சத்தில் மறைந்திருந்து தனி யாகத் தன் ஆத்மாவோடு பாடிக் கொண்டு எழுத்துக்களைக் கவிதையாக்கத் துடித்துக் கொண்டிருப்பது போல் அண்ணு வும் தினந்தோறும் நினைக்கிருர்,

அதோ தொடுவான் முகத்தில் புன்னகைக் கொடிகள் படர்ந்து மறைகின்றன.

நான் கவிஞனுக இருந்தால் அதனை மின்னலுக்கு உவமை யாகக் கொடுப்பேன்.

நான் ஒரு எழுத்தாளன்-நொந்துபோன நெஞ்சிலே விழுந்த கீறலாகவே கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/155&oldid=564599" இலிருந்து மீள்விக்கப்பட்டது