உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊55

அந்த சின்ன மின்னல் ஒளியில், பேரொளியைக் கண்ட தாக, மண் புழுக்கள் கீரைப் பாத்திக்கு நடுவிலே எட்டிப் பார்த்ததை நான் கண்டேன்.

அண்ணுவின் சிறு சிறு எண்ணங்கள் என் போன்ற மண் புழுக்களுக்கு அப்படித் தானே தெரியும்.

நான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு சீமாட்டியாக இருந்தால், எனது மாளிகையின் மேற்பரப்பில் அன்புக் காதலனிட்ட உயிர் முத்தங்களை என் உதட்டிலே எப்படி விளையாடுகின்றன என்பதைத் தன்னந் தனியே நான் சிந்திப் பேன் அல்லவா?

ஆனல் நான் தொழிலாளிக்கு வாழ்க்கைப் பட்டவன்: எனக்கு அவரிட்ட முத்தம் வட்டியிலே மூழ்கிப்போய் விட்ட குத்து விளக்காகும்!

அந்த ஒளியை நினைத்து நானும் பெருமூச்சு விடுகிறேன். அப்போது அந்த தொடுவான் மட்டும் அவ்வனவு அழ காக இருந்திரா விட்டால் இந்த நினைவு கூட வந்திருக்காது.

அண்ணு ஏழைகளின் வாழ்விலே இருக்கின்ற இன்பத்திற் காகவே நிலத்தை நோக்கி விளைகிரு.ர்.

அப்போது ஏழை குப்பாயி போன்றவர்கள் பழங்காலச் சிந்தனையைத் தொடுவானல் திரும்பப் பெறுகின்ருர்கள்.

தொடுவான் இல்லையென்ருல், உலகத்தில் வாழும் கோழிக்குஞ்சுகளான மக்களுக்கு வானம் போன்ற கூடை

கிடைக்காது.

எனக்குக் கவிதா நோக்கம் உண்டு.- ஆளுல் யாப்பு தான் தெரியாது.

வானத்தைக் கோழிக்குஞ்சு கவிழ்க்கும் கூடை என்பதை விட இப்படித் தான் கூறத் தோன்றுகிறது.

தனியாக மிதக்கும் ஒரு நீர்க்குமிழியைப் போலத் தென் கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/156&oldid=564600" இலிருந்து மீள்விக்கப்பட்டது