பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運57

அதற்குப் பணித்துளி என்று நான் தெரியாமல் பெயர் வைக்கிறேன்.

அந்தப் பனித்துளி கடலோரத்திலே இருக்கின்ற கிளிஞ் சவின் ஒய்யாரமாகக் குத்துகிறது.

இந்த உவமை எதற்கு? மனிதர்கள் வானத்தின் வலிவால் அற்பமான இடத் தில் சிதறி விழுகிருர்கள்.

அவர்களை மேலே இருக்கிற சக்தி கூர்ந்து கவனிக்கிறது. ஆட்டம் போட நினைத்த பனித்துளி அறுந்து போகின்ற தறிநூலப் போல் நைந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாய் கிறது.

இதற்காக இரக்கப் படுகிறவர்கள் யாருமில்லை. அதோ தொடுவானத்தில் அன்புக்கரங்கள் பணித்துளி யின் தலையை வருடுகின்றன.

உன்னுடைய பிறப்பு இறப்பில் முடிவதில்லை. என்னப் போல் நீ மறுநாள் தோன்றுவாயென்று அதற்கு வாழ்த்துரை வழங்குகின்றது.

எளியவர்களுக்கு இது போல் தான் அண்ணுவும் வாழ்த் .துரை வழங்கினர்.

குகையில் நெளிந்து கொண்டிருக்கும்- இருட்டிலேயே வாழ்க்கை நடத்தும்- சிறிய பூச்சிகளாக மனிதன் வாழு

குகையின் இடுக்கில் பாய்ந்து வரும் சூரிய ஒளியை அந்த பூச்சிகள் தாங்குகின்ற சக்தியற்றவைகளாக உள்ளன.

  • g ஒளியிழை சிறிதளவு வந்தால் கூட பூச்சிகள் ஒடி ஒலி கின்றன.

மனிதன் இப்படித் தான் இன்று வாழ்கிருன்.