பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 58

நல்ல கருத்துக்களில் ஒரு அனுவைக் கூட அவளுல்

ஜீரணம் செய்ய முடியவில்லை.

அவனைத் துக்கி விடுகின்ற சக்தி எங்கிருந்து வரும்: இந்த கேள்வியை இன்று தத்துவம் கேட்டுக் கொண் டிருக்கிறது.

கந்தல் துணி வழியாகப் பிய்த்துக் கொண்டு வெளிவரும் ஒளியைப் போல-சிதறியிருக்கும் மேகத்தின் வழியாக ஒளி தோடுவானிலிருந்து புறப்படுகிறது.

அதனைக் கண்டு எந்த மனிதனும் பயந்து ஓடுவதில்லை ஆனல் கருத்தைக் கண்டு பயந்து ஒடுகிருன்.

அவன் குகையில் வாழும் பூச்சி: தொடுவான் ஒளியிலே நனபவன் உலகத்திலே வாழும். நல்ல மூச்சு!

அண்ணுவின் கருத்துக்கள் பல நேரத்தில் இப்படி சிதறி வெளியே தெறிக்கும் போது பயந்த மனிதனும் உண்டுபழகிய மனிதனும் உண்டு.

ஆகர்ஷ்ன சக்திக்கு அப்பால் எந்த உலகமும் சுற்றுவ,

மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு உலகம்!

அவர்களும் ஈர்ப்பு சக்திக்குள்ளேயே சுற்றுகிருர்கள்.

அவர்களுக்குள் சூரியன் உண்டு வெறுத்துப் போன திலவும் உண்டு.

எண்ணையுற்ற அகல் விளக்கைப் போன்ற தாரகைகளும் உண்டு-அலைகின்ற மேகங்களும் அழுவதற்கென்றே உண்டு.

இந்த உலகங்கள் மரணக்குழியில் உருண்டு விடக்

கூடாது என்பதற்காக, அகிலாண்டமாக அறிஞர்கள் பிறப்ப துண்டு.