பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

歪5Q

அவர்கள் திசையற்ற இடத்திலே இருந்து பிறந்து, வழி யற்ற பாதையிலே நடந்து, விழியற்றவர்களுக்கு வழி காட்டு கிருர்கள்.

அவர்களின் வேர் மூல விதையின் முளையிலே தங்கியிருக் கிறது.

அந்த விதைக்குள்ளே கிளை-தழை-யூ-பிஞ்சு-கணிஅத்தனையுமுண்டு.

விதை விதைத்த பிறகுதான் இலை வெளியே வரும். விதையைப் பார்த்து கதை இவ்வளவு தானு என்று முடிவு கூறுபவன் முட்டாள்.

அண்ணு, விதையாக இருந்து-அவரே விருட்சமாக ஆனவர்.

வானமாக இருந்து-தொடுவாளுக வளைந்தவர். வரியாக இருந்து வரலாருக, முடிந்தவர். ஒளித்துளியாக இருந்து ஒசையாக லயம் கலந்தவர். ஒளிக்கொழுந்தாக இருந்து பிழம்பு நுனி வருடலாக நீண்டவர்.

துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர். இறைவனின் முதல் மூச்சான காற்ருக இருந்து பூந் தோட்டத்திலே புகுந்து வரும் தென்றல் ராணியாகத் திகழ்த் தவர். -

இருளைத் தினந்தோறும் குடித்தும் ஒளியாக இருக்கின்ற நிலவு இன்னும் வரவில்லை.

தோட்டத்தில் விழா நடத்துகின்ற யூக்கள் இன்னும் கூம்பவில்லை.

இராஜாவின் அந்தப்புறச்சுவற்றுச்குப் பின்னுல் இன்பத் தின் முமுணுணுப்பு இன்னும் துவங்கவில்லை.