பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6

ஆழமான அறிவிருப்பவர்களுக்கு அண்ணு மேன்ே இருந்து வழிவதைப் போலத் தோன்றுவார்.

உயரமான ஒரு ஸ்துரபியின் மீது ஏறி நின்று தொடு வானப் பார்க்கும் போது, நிலத்திற்கும் தொடுவானத்திற் கும் மையத்தில் ஒரு கரிய கோடு ஒடும்.

அந்த இருள் இதுவரையிலும் உலகம் சந்திக்காத இருள். அந்த இருளுக்கு மேல் இதுவரை சந்திக்காத ஒரு வெள்ளி ரேகை இருப்பதையும் பார்க்கலாம்.

இது எதனால் வந்தது என்று விஞ்ஞானியும் விளக்கவில்லே மெய்ஞானியும் கூறவில்லை.

நான் நினைக்கிறேன், அந்த இருள்தான் மூடநம்பிக்கை. தலையை அழுத்துகின்ற அண்ணுவாகும்.

வறண்டுபோன ஒரு ஆறு! அதன் மீது தொடுவானத்தைப் பார்த்தேன்,

பரந்த மணல்வெளி, ஆற்றின் படுக்கையாக இருந்தது. எல்லேயற்ற பெரும்பயணத்திற்கு அது இயற்கையாகவே போடப்பட்ட பாதையாகவே விளங்கியது,

தொடுவானம் அந்த வரண்ட ஆற்றைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

மனலே அருவியாக ஓடி வானத்தில் கலப்பதைப்போ.ை தோன்றுகிறது.

நிலம் நீராக மாறுகின்ற விசித்திரக் காட்சியை இந்த இடத்திலேதான் பார்க்க முடியும்.

இதற்குப் பெயர் தினம யக்கமாகும்! வரண்டு போனவர்கள்-வதங்கிப் போனவர்கள். சுரண்டப்பட்டவர்கள்-சுருங்கிப் போனவர்கள்-இருண்ட வர்கள்- எழுந்திருக்க முடியாதவர்கள்.மிரண்டவர்கள் .