பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£63

துன்பம் தின்றுவிட்ட காரணத்தால் மீதியானவர்கள் எல்லாம் திணைமயக்கத்தால் தெரிகின்ற ஆற்றைப்போல் தொடுவான நோக்கி ஓடுகிறவர்கள்.

அந்த தொடுவானம்தான் அறிஞர் அண்ணு. உயர்ந்த மலைமீதிருந்து தொடுவானத்தைப் பார்த்தால் ஒரு பொட்டலத்தை துணியில் சுருட்டி வைத்ததுபோல் மலை உள்ளேயும்-தொடுவானம் கீழேயும் சுருண்டிருக்கும்.

அண்ணுவும் பெரிய மனிதர்களை தன்னுள்ளே சுருட்டிக் கொண்டவர்.

வெட்ட வெளியில் ஒரே ஒரு மலையிருந்து, அப்போது ஒரு வானவில் வந்திருக்குமானல், அந்த மலே ஒரு தூலத்தில் கட்டப்பட்ட மணியைப்போல் மலை தொங்கும்.

அண்ணுவும் தன்னுடைய வானவில் சொல்லால் பெரிய மலைகளைத் தொங்க விட்டிருக்கிரு.ர்.

தொடுவானைப் பிற்பகுதியாக வைத்து முன்னே வரிசை யாகத் தென்னை மரங்கள் இருக்குமானல், அவை நிழலுருவத் தில் நிற்கும் நேர்த்தியாகத் தெரியும்.

அண்ணுவுக்கு முன்னுல், இருண்டவனும் நேர்த்தி யாகிருன்,

இது தொடுவான் செய்கின்ற ஜாலவித்தை! தொடுவானத் தொட்டபடி ஒரு ஜீவநதி வருமானுல் அது பூமியின் தலையில் கட்டப்பட்ட கூந்தல் நாடாவாகத் தெரியும்

அண்ணுவை தொட்டபடி எவளுவது வருவாளுளுல் அவன் தலைக்கு அழகாக இருக்கும் பட்டு நாடாவாகத் தெரிகிருன்.

தொடுவான ஒட்டி ஒரு ஒளி இருக்குமானல், அது வானத்திற்கு நிலத்திலே வைக்கப்பட்ட கண்ணுடியாகத் தெரியும்.