பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I67

வெளியே உயிரணுக்கள் இருக்கிற இடமெல்லாம் போப் இதனைச் சொல்லாயோ!

துாயருக்குத் தொடுகின்ற புகழ் மாலை. மாலையிலுள்ள பூக்களை வண்டினங்கள் வாய்வைத்து உறிஞ்சி எச்சில் படுத்தவில்லை.

புத்தம் புதிய பூக்கள்-பொழுதுக்கே பூத்த பூக்கள்சத்துடைய ஒருவனுக்கு சாற்ற வந்த பூக்கள்

நிலாச் சொறிந்த வெள்ளிப்பூ! ஒடும் மின்னற் கொடியில்-உதிர்ந்த பிழம்பொளிப்பூ: நல்லப் பூ!

இப்பூக்கள், அண்ணு என்னும் என் .இரு கண்களுக்கு இட்டப் பூக்கள்.

வீனுக்குத் தலை வைத்து-வெறுப்புக்கு வழி வைத்து மானிடராய்த் திரிபவர்கள் ஒதிய மரங்கள்: -

ஓங்காரத் தமிழ்மொழியின் பயனை-ஒர்ந்தோர்ந்துஆங்கார அடுப்பவித்து-பாங்கான பண்பெனும் விளக்கேற்றிதீங்குக்கு உளம் நடுங்கும் தித்திக்கும் மனமுடையோர் வரிசை தன்னில் - ஒவியமாய் - காவியமாய் - pவியமாய் இருப்பவரே-அறிஞர்குல அரசரே!

கண்ணுள்ளே விளங்குகின்ற மணியே-இன்பக் கனியேநாவரசே-செங்கரும்பே-ஞானப் பண்ணுள்ளே விளைந்த அருட்பயனே!

உண்மைப் பதியே-ஒங்கும் நிதியே-விண்ணுள் விரிந்து ஒளிரும் புகழே:

தேர்ந்த உளத்திடையே மிகத் தித்தித்து ஊறும் செழுந்தேனே..சொல்லரசே!

சார்ந்து திகழும் சண்பக எழுத்தாளா! பொறுமையின் பெருந்தகையே!

கூர்ந்த மதி நிறைவே! தமிழ்க் கொழுந்தே! தீர்ந்த பெரும் குறள்நெறித் துணையே! ஒப்பிலாச் செல்வமே! எனது அரசியல் குருவே! சிறப்படையச் செல்வனே! அறப்படைக்குத் தலைவனே! இலக்குளிர்ந்து நிழல் பரப்பும் தருவே தலைக்குளிர்ந்த அறிவே!

கலைக்குளிர்ந்த கலையே! மலைக்குமேல் நிற்கும் முனையே! மதியணிந்த ஒருவா! தமிழர் துதியணிந்த ஒருவா: ஒழுக்க விதியணிந்த ஒருவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/168&oldid=564612" இலிருந்து மீள்விக்கப்பட்டது