பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

காலம் தாயின் மார்பைப் போல் ஓர் அமுதக் குடம். முதல் பிள்ளை வளரும்வரை அது உழைத்து, இரண்டாவது பிள்ளை வருகிறவரை, அது சுருங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

அண்ணு இருந்தார் எ ன் ப த ற் கு ம்-இறந்தார் என்பதற்கும் பலருக்கு வித்தியாசமே தெரியவில்லை.

இருந்தாரும்-இறந்தாரும் ஒன்று போலத் தெரிந் தாலும் இருந்தார் என்ருல், ஒரு காலத்தில் இருந்தவர் என்றும், இறந்தார் என்ருல் இப்போது இல்லாதவர் என்றும் பொருளாகும்.

இன்னும் நூருண்டுகட்குப் பிறகு இறந்தார் என்ருலும் அப்போது இல்லாதவர் என்பதுதான் பொருளாகும்.

அப்படியாளுல் அண்ணு எல்லா ஊழிக்காலத்திற்கும் இருந்தார் என்றுதான் பொருளேதவிர, ஊழியை விட்டே ஒதுங்கிவிட்டார் என்பதல்ல.

அண்ணு ஒரு வியப்பான கலவை! அதைக் கலந்தவன் எங்கும் கலந்தவன்! அவனை நோக்கி ஒடுகின்ற ஆத்மாக்கள் அண்ணுவிடம் தங்கி இளைப்பாறிவிட்டே செல்ல வேண்டும்,

காலத்தின் கட்டளை இது: இதைக்கூற நீ யார்? என்று என்னைக் கேட்டால் அவர்கட்கு இதோ ஒர் உவமை.

கண்ணுக்கு முன்னல் காட்சியிருக்கிறது. கண்ணுக்கும் காட்சிக்கும் இடையே இருப்பது தூரம் மட்டுமல்ல-காற்றும் இருக்கிறது

காற்றின் அனுமதியின்றி கண்ணுெளி காட்சியைத் தீண்ட முடியாது.

எனவே, காலத்தின் கட்டளைப்படி, அறிவை நோக்கி ஒடுபவன் அண்ணுவிடம் இளைப்பாறவே வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/17&oldid=564461" இலிருந்து மீள்விக்கப்பட்டது