iş
காலத்தின் மடியில் அவர் ஏன், தானே ஒரு காலமாக தவழ்ந்து கொண்டிருக்கிருர்,
அவரைப் பிறப்பித்தவன் அவரை இறப்பித்தான்! அவரைச் சிறப்பித்தவன் அவரைச் சிறை பிடித்தான். அவரை வரப்படுத்தியவன், மீண்டும் வரவேற்றுக்
கொண்டான்.
அவரைக் கறைபடுத்தியவர்கள் கரைந்து கொண்டே செல்கிருர்கள்.
ஆண்டுக்காண்டு நம்முடைய கண்கள் குடம் குடமாகக் கண்ணிரைக் கறந்தாலும், காலமாகிவிட்ட அண்ணுநெஞ்சில் நீங்காக் கோலமாகிவிட்ட அண்ணு-மனிதற்கும் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட அண்ணு-மனத்திற்கும் மனசாட்சிக்கும் சீலமாகிவிட்ட அண்ணு ஒருமுடியாத கதை: விடியாத இன்பம்! நொடியாத வாழ்க்கை:
"இந்த இதய எழுச்சி எழுத்துக்களின் மையப் புள்ளியே காலத்தின் நீண்டகரங்களால் செதுக்கப்பட்ட மனிதத் தேர். நல்ல வாழ்க்கை என்ற சுற்றுலா முடிந்த பிறகு, மூல விக்ரகத் தின் முன்னுல் நிற்கிறது என்றே பொருள்.
அண்ணு இறந்த காலமுமல்ல-நிகழ்காலமுமல்ல-எதிர் காலமுமல்ல!
அழகிய காற்று பொருள் புரியவில்லையா?
கால் என்ருல் காற்று கம் என்ருல் அழகியது!
责