இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீங்கள் அவனைப் பார்த்திரோ: அவன் ஒரு நீர்வீழ்ச்சி! அது ஒரு நீர்த்துளி: தெய்வத்தின் ஈரத்தால் நெய், யப்பட்டது:
அதன் இழைகள் காலத்தை. வெல்லும் பண்பாடுடையன!
நீர்வீழ்ச்சிக்கு மறு பெயர் அண்ணு.
அதோ அது தாயகத்தின் மடிமீது விழுகிறது:
அதனுடையச் சிதறலில் ஒளி போர் செய்கிறது:
இப்போது துளிகள் அத்தனை யும் வண்ணச் சொட்டுகள்:
நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது: ஞானி அதன் முடிவை சிந்திக் கிருன்!
அது மேலே இருக்கும்போது, பலத்தோடு வழிகிறது.