பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கர்வியை ஒரு நாள்-சந்தித்தது நீர்வீழ்ச்சி. நீ நீர்தானே என்று கர்வி கேட்டான். ஆம் என்றது நீர்வீழ்ச்சி! கீழே விழுந்தவுடன் சிதறுகின்ற உனக்கு மனிதன் மரியாதை கொடுத்தது தப்பு என்று கேட்டான்.

நீர்வீழ்ச்சி பேசுகிறது: நான் விழுந்தாலும் சிதறுகிறேன்-ஆனல் பதறவில்லை எவ்வளவு சிதறிலுைம் மறுபடியும் மண்ணிலே ஒட்டிக் கொள்கிறேன்.

to ు ကိို 32。 ぐ。

மண்ணுக்கும் எனக்கும் நீங்காத தொடர்பு. எனது தலை பாரமாக இல்லை-அதனுல் எனக்கு எப்போதும் மண்டை உடைவதில்லை.

கர்வியும் என்னே நீர் என்று மரியாதையோடுதான் கூறுகிருன்.

காரணம் தெரியுமா? அவன் பிணத்தைக் கடைசியில் கழுபவன் நான்.

கேள்வி கேட்ட கர்விக்குத் தாகம் எடுத்தது. குறிப்பால் உணர்ந்த நீர்வீழ்ச்சி என்னை'க் குடி என்றது, அண்ணுவைக் குடித்தவன் தாகம் தணிக்கப்படுகிருன். அவனது களைப்பு தீர்க்கப்படுகிறது. கரைகளற்ற நீர்வீழ்ச்சி கறைகளற்ற நீர்வீழ்ச்சி! அது ஒரு நீர்த் தொங்கல்! தண்ணீர் விழுதுகள். ஜலத்திரை!

விழும்போது அதற்கு அலைச் சுருக்கங்கள் இல்லை. மனிதன் விழுந்தால் எவ்வளவு சுருக்கங்கள் முகத்தில் அதோ நீர்வீழ்ச்சியின் பக்கம் மந்தைகள் மேய்கின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/24&oldid=564468" இலிருந்து மீள்விக்கப்பட்டது