உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

அத்தனையம் வைரத்துரசுகள்! அவை தண்ணீர்ப் பிஞ்சுகள்:

பிஞ்சு தாய் வீழ்ச்சியைப் பார்த்து சிரிக்கிறது!

ஒய்வெடுக்கவா சென்று விட்டாய் என்று நீர்வீழ்ச்சி கேட்கிறது.

வண்ணப்பல் காட்டி தண்ணீர்ப் பிஞ்சு தலையாட்டுகிறது

பிரவாகத்தில் கலந்துவிடு இல்லையென்ருல் உனது சிறிய உடலை எறும்பு...டச் சிதைத்து விடும் என்றது நிர்வீழ்ச்சி!

அண்ணுக.டத் தம்பிகளை அறிவு பிரவாகத்தில் கலக்கச் சொன்னர்.

கிடைத்த ஒளியில் பிரகாசிப்பதைவிட கிடைக்கப் போகும் ஒளிக்காக வாழ்க்கையை அமைப்பதே அண்ணுவின் கொள்கை.

விழுந்து விட்டோமே என்று நீர்வீழ்ச்சி மலையுச்சியைப் பார்க்கிறது.

நீ இன்னும் விழுந்துவிடவில்லை; வழிந்து கொண்டிருக் கிருய் என்று உச்சி உரைத்தது!

நான் அவ்வளவு நெடியவன? நீர்வீழ்ச்சி கேட்கிறது: இறவாது வடிபவன் நீ என்று உச்சி கூறியது: என்னுடைய முடிவு எப்போது? நீர்வீழ்ச்சி கேட்கிறது!

உன்னுடைய தொடக்கமே எனக்குத் தெரியாதே மலையுச்சி சொல்லிற்று,

தொடங்கியது முடியத்தானே வேண்டும்! நீர்வீழ்ச்சி கேட்கிறது.

எது முடிகிறதோ அது தொடங்கும் என்றது உச்சி! ஆகவே நீ முடியவில்லை உனக்குத் தொடக்கமில்லை. அப்படியாளுல் நான் μπή: நீர்வீழ்ச்சி கேட்டது. அருள் முளைக்கும் வேருக்கும் ஆணிவேர் நீ! பொருள்புரிய வைக்கின்ற புதியதோர் தத்துவம் நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/28&oldid=564472" இலிருந்து மீள்விக்கப்பட்டது