பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன் !

என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே நான் சிக்கித் தத்தளித்தேன்.

அவர் ஒரு கானல் நீர் !

េយ៉េ

நிலையற்றது :

தேவையில்லாதது :

கூடாதது :

நினைத்தாலே பாபமானது !

"உயரே போன ஒருவன் என்ருவதோர் நாள் கீழே இறங்கத்தானே வேண்டும் ?”

  • கீழே இறங்குபவன் மேலே ஏன் ஏற வேண்டும் ?”

' வானவில்லே அப்படித்தான் ! நம்பக் கூடாது அதை! நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன் '

தலைகீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை,

அவ்வாறெனில் எனக்கு மட்டும் அவாவென்பதே அறவே யிலேயோ ?

ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது.

இன்பம் வருகிற நேரத்தில் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாதது.

இது வேறு விஷயம்தான்! இருப்பினும் இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி.

இதயக் குமுறலை இயம்பி முடித்தேன்.

浚 පුං 嫁魏 镑设 ੱ: