பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

நுணு என்றவோர் இலையை நுணுகிப் பார்த்திருக் கிருயா ?

அது போன்ற பச்சையாகவே இருக்கும் குருக்கத்தி இலை! அந்தப் பச்சை இலையிலே பூக்கும் பூ வெண்மை நிறம்! மாதவிப் பூங்கொத்து என்பர் அதனை அம்மலருக்குப் புறவிதழ்கள் ஐந்துண்டு!

இவ்வைந்து இதழ்களும் பசுமை நிறமாக இருப்பதால் கபிலரெனும் கன்னித் தமிழ்ப் புலவர் அதனை 'பைங்குருக் கத்தி’ என்ற பெயரைச் சூட்டினர் போலும்!

அம்மலருக்கு ஐந்து அகவிதழ்களும் உண்டு! அவ்விதழ்களில் ஒன்றே ஒன்று மட்டும் மஞ்சள் நிற முடையதாம்!

மாதவிக் கொடியைக் கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர்!

உரிய மொழியில் அதனை மாதபி’ என்றும் மாத பிளாதோ என்றும் கூறுவர்!

தாவர நூலறிஞர்கள் அதனே ஆங்கிலத்தில் (MADA. BIL01A) மாடபிளோட்டா என்று அழைக்கின்றனர்!

நல்ல பச்சை நிறங்கொண்ட அந்தத் தமிழ்க் கொடியின் பெயரைத்தான் ஆங்கிலத்திலும் வைத்துக் கொண்டனர்!

பச்சை நிறத்தின் பெருமையைப் பார் பார்-அதனைப் பாராட்டி ஆராய்ச்சி புரியும் தகுதியைப் பெற்றுவிட்டது:

மாதவிப் பூங்கொத்துகள் அவை பூத்த சின்னுட்களில் உதிரும்! பொலிவிழந்து வாடும்!

இவ்வாறு பொலிவிழந்து நின்ற ஒரு மாதவிக் கொடியை சிலப்பதிகாரக் கதாநாயகன் கோவலன் கண்டாம்ை!

மாதவியைப் பிரிந்து அவன் மனமுடைந்து நிற்கும்போது அந்த மாதவிக் கொடியைப் பார்த்து. "நீயும் மாதவிய்ைப் போல இருக்கிருயே’’ என்று மனமுருகினனும்!

அ.-3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/42&oldid=564486" இலிருந்து மீள்விக்கப்பட்டது