பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒演

சாதாரண மாதவிக்கொடி தனது நிறத்தால், சாகா வரம் பெற்ற தமிழ் இலக்கியமாகி, உலக இலக்கியமாக உருவடைகிறது.

மாதவிக் கொடியின் இலையைப் போல மக்கள் மன்றத் திலே பச்சை நிறமாகி விட்டார் பேரறிஞர் அண்ணு'

மக்கள் மனதை நல்ல பச்சை நிறமாக்கிட வளத்தை ஊட்டுகிருர்-தனது அறிவுத்திறனுல்.

அந்த மலரின் பசுமையான புறவிதழ்கள் ஐந்தைப் போல, அவரது புறத் தோற்றப் பண்புகள் காணப்படுகிறன. அதன் அகவிதழ்கள் ஐந்தை ஒப்ப அவரது ஐம்புலன்கள் பணியாற்றுகின்றன.

அவற்றுள் ஓரிதழ் மட்டும் மஞ்சள் நிறமல்லவா. இயற்கையின் படைப்பே படைப்பு. அழகைப் படைக்க இயற்கை கலைஞனுக்கு ஈடு எவருளர்? தம்பி.

அதனுலன்ருே அம்மலர் கண்கவர் வனப்பு பெறுகிறது: மஞ்சள் நிற இதழைப் போல அவர் சமுதாய சீர்த்திருத் தங்களைச் செய்து வருகிருர்!

அதளுல் அவர் பசுமையான சீர்திருத்தவாதியாக விளங்குகிருர்:

மாதவிப் பூ வெண்மை நிறமானதன்ருே! அந்த தமிழ் மகனின் உள்ளமும் மாதவிப் பூவைப்போன்றதே என்பதனை மக்களறிந்து கொண்டனர்!

மனம் திறந்த மக்கள் மடைத்திறந்த வெள்ளம் போல அவரைப் பின்பற்றி ஓடிவருகின்றனர்!

அப்பூவின் பத்து கேசரங்களும் பொன்னிறத்ததை உகுத்து நிற்குமாம்!

அறிஞருள் அறிஞராக விளங்கும் அண்ணுவும் பொன்னிறத் தாதையொத்த தனது அறிவினை நமக்கு வழங்குகிருர்!

sibinafsir aisiarsmi Ggirst crain (Chromo Some Nunder) இன்றுவரை கண்டு கூறப்படவில்லை.