பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

அதுபோலவே,அவரின் இதயப்பூர்வமான உண்மையான. மக்கட்தொண்டு இன்னும் சிலரால் உணர்ந்து உலகுக்கு உரைக்கப்படவில்லை!

காலம் அந்தச் சிலரது விழிகளைத் திறந்தே தீரும் என்பது உறுதி!

தமிழகத்திலே தோன்றிய மாதவிக் கொடி ஆங்கில மறிந்த உல்க ஆய்வாளர்களால் ஆராயப்படுகிறது!போற்றப் படுகிறது!

அதுபோலவே, உலகம் ஆராய்ந்து போற்றும் நிலையை அவர் ஒர் நாள் பெறுவார்:

சாதாரண ஒர் மாதவிக்கொடி இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டதைப் போல; அவரும் உலக இலக்கியமாகத் தான் திகழப் போகிருர்!

பச்சை நிறம் வளத்தைக் காட்டும் வண்ணம்! அது அவரது அறிவு வளத்தை அவனுக்கு அறிவித்தே தீரும்!

ஞாலம் அவர் பின்னே ஓடிவரும், காலம் மிகத் தொலைவிலில்லை தம்பி!

பச்சையை நீ மாயை என்ருல் பார் நம்புமா? பேதை மானிடனே! அதுமட்டுமா?

வெற்றிலை போட்டறியாது! ஆனால், வாய் சிவந்திருக்கும் கொவ்வைக் கணியருந்தும், கொஞ்சு மொழிகள் பேசிடும். அந்த அஞ்சுகத்தின் நிற்மும்கூடப் பச்சையன்ருே! கண்ணின் கருமணிகள் குளிர-காட்சி பல வழங்கி மண் னிைல் தெரிகின்ற முதல் நிறமும் பச்சை!

பச்சைத் தழைகட்டி, பந்தலை உருவாக்கி, இருமனமும் ஒருமனமாய் இணைந்து பிணைகின்ற இன்பத் திருமணத்தில் காட்சி நல்குவதும் கவின் பச்சை!

இந்த இன்ப நிறத்தை போய், எத்திற மனங்கொண்டு மாயை என்கிருய்?