44
கற்பனே!
அவர் வழங்கும் அறிவாழமிக்கக் கட்டுரை மணம்;
தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும்
ః
வாயுதிர்க்கும் வளமான பேச்சுக்கலை; இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.
அந்தக் கருத்துச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்; காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை: சூாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!
பச்சை என்ருலே வளத்தைச் சுட்டும் நிறமன்ருே! சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியான்ப் பாதை களன்ருே அவை:
முற்றும் நீ அறிவாயே! பின் ஏன், முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்ருய்!
வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன். விளங்கி நீ செல்வாய் என்று முற்றிற்று,கூறிற்று, பச்சை.
姓 游 gł: § wo 怒 <
மஞ்சள் சாமந்தி !
அஞ்சனந்தோய் விழியுடையாள் மஞ்சள் நீராடி,அந்தி வேளையிலே கொஞ்சும் தென்றலோடு குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு; தளிர்நடை போடு தலொப்ப செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி கேவி சிரிப்பு சிரித்தது:
சிசிப்பொலி கேட்டு சிலிர்த்து நெருங்கினேன்;