பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பைந்தமிழறிஞர் பார்புகழும் பசுந்தமிழ் முதற்செல்வர்: நைந்த மக்கட்கு நிம்மதி வழங்குபவர்: கைதேர்ந்த அரசியல் பெரும் ஞானி: அறிஞர் குல திலகம் ஆண்ணுவின் சமுதாயச் சீர்திருத்தம் துவங்கு முன்பு காட்டிய நிறமும் மஞ்சள் தானே! எற்றுக்கு அவ்வண்ணமே தேர்ந்தெடுத்தார் ? பற்றியிருக்கும் இந்நாட்டு மூட நம்பிக்கைப் பினியைச் கட்டுதற்கு ?

மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்! என்று காங்கிரசார் தேர்தல் ஆலாபனை பாடியது. ஏன் ?

அடிமை நோயைக் காட்டிட-அதனை அகற்றிட ! தேர்தல் வாயிலாக மக்களது வாக்குகளைப் பெற்றிட: சுதந்திர தீபத்தை ஏற்றிட வன்ருே :

பிணியுள்ள இடத்திலேதான் மருத்துவப் பேரறிஞர்கள் தத் தமது பணியைத் தொடங்குவது வழக்கம் !

அண்ணனுடைய மஞ்சள் கொடியும் அது போன்ற தன்ருே :

பண்புள்ளோர் அன்னேனின் சேவையை தொழுது வணங்கினர் :

அஃதற்ருேர் நரம்பிலா நாவிற்கு வந்தவாறு பேசி ஆர்ப் பசித்தனர்.

நோயைத் தீர்ப்பது மட்டுமே கடனன்று அவருக்குஉணர்த்தார் இஃதை.

வாய்மைப் பொன்மொழியாலே வடித்த மூலிகையின் சாரம் பிழித்தெடுத்தார்.

சாகக் கிடக்கும் சமுதாயமே சற்றே பிழைத்தெழு!” என்று மருத்துவம் புரிந்தார்.

அன்னவரின் எச்சரிக்கை பதாகென ஏற்றிய கொடியின் நிறம் மஞ்சள் தம்பி மஞ்சள் !