பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む3

பூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்துவிட்டாயா என்ருன் மாயை நம்பிக் கொண்டிருந்தவன்.

தம்பி. தம்பி! நான் எங்கே சொன்னேன்? என் வர லாற்றில் ஒரு பகுதி இது. லுேமம் கேள் என்று பேசிற்று பூ! வேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் மார் gú$uii (Pterocarpus Marsupium) aT6ir/po»ράδέρετ*.

தமிழ் மக்கள் எனது வளர்ச்சிக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கின்றனர்.

தமிழிலே சொற்பஞ்சமில்லை என்பதைத்தானே இது தரணிக்குக் காட்டுகிறது என்று நினைக்கிருயா ? அது உண்மைதான்.

கருங்கால் வேங்கை, பாராரை வேங்கை, நெடுந்தாள் வேங்கை என்ற பல பெயர்களுண்டு.

அந்த வேங்கை மரத்திலே யூக்கும் எனக்குத்தான் வேங்கைப் பூ என்ற பெயர்.

நான்தான் மஞ்சள் வண்ணமாக இருப்பேன். கொத்து கொத்தாக மலர்வேன்.

அழகிலே சிறந்த யூ வேங்கைப் யூ. காணக் காண கவர்ச்சி மிக்கப் பூ.

வேங்கைப் பூவின் தாது பொன் பொடிய ன்ன மின்னும் ஆ, பூக்கத் தொடங்கும்போது பெரும்பாலான அரும்பு கள் ஒருங்கே மலரும்.

‘அரும்பல மலர்ந்த கருங்கால் வேங்கை என்று அதன் மலர்ச்சியை ஒரு புலவர் பாடினர்.

வேங்கைப் பூ மஞ்சள் நிறம்தான் என்று நான் கூறினால் நீ நம்புவாயா?

அதற்கும் சில இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன பார் தம்பி.

' பொன்னினர் வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்துப்’ என்று நற்றினை'யில் வரும் 28-ம் பாடல் நவில்கிறது.