53
"பொன்னினர் வேங்கைப் பூஞ்சிலைச் செவி இயர்' என்று. அதே இலக்கியத்தின் 151-ம் பாடலில் காணப்படுகிறது.
o பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவி ' என்று ‘ஐங்குறுநூறு அறைகிறது.
- கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னென வீசு மந்து" என்று புறநானூறு புகல்கிறது.
பொன்நிறமான வேங்கைப்பூ நறுமணமிக்கது. பெண்கள் அதனை பெரிதும் விரும்பி கொய்யச் செல்வர்.
பறிக்கச் சென்ற பாவையர் அப்போது புலி புவி என்று பூசல் புரிவர்.
வேங்கையெனும் சொல் புலி’ என்ற மிருகத்தையும். குறிக்குமல்லவா ?
அதனுலே அம்மங்கையர் அவ்வாறு பூசல் செய்வர். ஆனல், அதற்கும் காரணமுண்டு.
பூ மலர்ந்த வேங்கைமரம் புலியை ஒத்திருக்கும். அதனுல் வேங்கைப் பூவினைப் புலிப் யூ” என்பர் பாவையர்.
வேங்கை மரத்தில் புலிபோன்ற வண்ணப் புள்ளிகனோடு யூ, மலர்கின்றன.
- புலிப்பொறி வேங்கைப் பொன்னினர் கொய்து - என்று ஐங்குறுநூறு என்ற இலக்கியம் கூறுகிறது.
"புலி உரி இரிஅதற் கடுப்பக் கவி சிறந்து நாட்யூ வேங்கை நாள் மலர் உதிர' என்று அகநானூறு செய்யுள் அறிவிக் கிறது.
"கருங்கால் வேங்கை iயுகு துறுகல், இரும்புலிக் குருளை பிற்றேன்றும் என்று குறுந்தொகையில் காணப்படுகிறது. வேங்கைப் பூ, புலியை ஒத்திருப்பதனையறிந்த வேல் விழியர், பூ பறிக்கும்போது "புலி புலி"யென ஆரவாரிப்பர். இதனைத் தமிழ் இலக்கியங்கள் அழகாக இயம்புகின்றன. " மன்ற வேங்கை மலர்தம் நோக்கி ஏருதிட்ட ஏமம் பூசல் ” என்று குறுந்தொகை"யிலும்,