55
இல்லை தம்பி, பூவின் சில பாகங்களைக் கூறினேன். பிற பகுதிகளையும் கூறுகிறேன் கேள் என்றது பூ.
மாயை நிரம்பிய மனிதன் வேங்கைப் பூ புகன்ற வர லாற்றைக் கேட்டு மயக்கமடைந்தான்.
என்னே மானிடர் கூட்டத்தின் பிரதிநிதியே. பூ உரைப் பது புனைந்துரையோ என்று மயங்ககிருயா ?
தெளிவில்லாத நெஞ்சமே! நீ தெளிவடையத்தான் தெள்ளுத் தமிழிலக்கிய வரலாற்றின் ஆதாரங்களையும் கூறு கின்றேனே.
பிறகு ஏன் உன் பிஞ்சு நெஞ்சு பேதலிக்கிறது ? பிறவும் சொல்கிறேன் கேள் என்று மேலும் பேச ஆரம்பித்தது.
நான் வேங்கை மரத்தில் மலர்ந்ததை அறிந்த சுரும்பினங் கள், வேங்கை மலர்ந்ததாக எண்ணிப் புலியைச் சூழ்ந்து அதன் முகத்தையும் உடலையும் சுற்றிச் சுற்றி வலம்வர ஆரம் பித்தன.
"கலித்தொகை என்ற இலக்கியத்தின் 46.வது பாடலைப் படித்துப் பார். உண்மையை உணருவாய்!
அது மட்டுமா? சில புலவர்கள் வேங்கைப் பூவாகிய என்ன நெருப்புத் துண்டிற்கும் உவமையாக்கிக் கூறி புள்ளனர்.
- எரிமருள் வேங்கை இருந்த தோகை ’ எனும் ஐங்குறு நுாறு பாடலும்,
- எருவை நந்தொடு எரிஇணர் வேங்கை ’’ என்ற பரி பாடலும் அதை விளக்கி நிற்கின்றன.
நான் வேங்கை மரத்திலிருந்து உதிரும்போது என் காட்சி எப்படி இருக்குமென்று நீ பார்த்திருக்கிருயா ?
எவ்வாறு நீ நோக்கி யிருப்பாய் என் எழிற் காட்சிதனை ? அகநானூற்றில் வரும் 202-ம் பாடலைப் படி, உனக்கு அவகாசமிருந்தால் !